ஜூலை 17ம் தேதி முதல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் - தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, 06 மார்ச் (ஹி.ச.) இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்புடன் 2 கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி அரசிதழ் அறிவிப
ஜூலை 17ம் தேதி முதல் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் - தமிழக அரசு அறிவிப்பு


சென்னை, 06 மார்ச் (ஹி.ச.)

இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்புடன் 2 கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி அரசிதழ் அறிவிப்பு மூலம் அறிவித்தது.

அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை குடியிருப்புகளை பட்டியலிடவும், 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

முதன்முறையாக, இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது. அதோடு இது இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாக அமையும். தரவுகளைச் சேகரிக்க மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படும் மற்றும் பொதுமக்கள் தங்களின் விவரங்களை தாங்களாகவே பதிவு செய்யும்வசதியும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான 4 டிஜிட்டல் தளங்களை டெல்லியில் நேற்று (05.03.2026) அறிமுகம் செய்தார். அத்துடன் கணக்கெடுப்புக்கான பிரகதி (பெண்), விகாஸ் (ஆண்) என்ற சின்னங்களையும் அவர் வெளியிட்டார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

45 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் வீட்டின் நிலை, வசதிகள், சொத்துக்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 33 கேள்விகள் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b