டி20 உலகக்கோப்பை - 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
மும்பை, 06 மார்ச் (ஹி.ச.) டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து முடிந்த நிலையில், இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டி20 உலகக்கோப்பை - 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா


மும்பை, 06 மார்ச் (ஹி.ச.)

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து முடிந்த நிலையில், இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், நேற்று நடந்த 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அபிஷேக் சர்மா சரியா விளையாடவில்லை. அவர் 9 ரன்னில் அவுட் ஆனார். பிறகு சாம்சனும், இஷான் கிஷனும் சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

இஷான் கிஷன் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆனார். அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்தார். சிவம் துபேவும் அதிரடியாக ஆடி 43 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இறுதியில் திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாட, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் வில் ஜேக்ஸ், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் இங்கிலாந்து அணியில் பில் சால்ட் 5 ரன்கள், ஹாரி புரூக் 7 ரன்கள், பட்லர் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள்.

பிறகு ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டினார். இன்னொரு பக்கம் வில் ஜேக்ஸ் நன்றாக விளையாடி ரன்கள் குவித்தார். இருவரும் சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். ஜேக்ஸ் 35 ரன்களில் அவுட் ஆனார்.

தொடர்ந்து நிலைத்து ஆடிய பெத்தேல் சதம் அடித்து அசத்தினார். கடைசி வரை போராடிய அவர் 105 ரன்களில் (ரன் அவுட்) அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது.

அதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வரும் 8ம் தேதி நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதுகின்றன.

Hindusthan Samachar / JANAKI RAM