திருபுவனை குருவிக்கார மக்களுக்கு இலவச பட்டா வழங்க கோரி தீபந்தம் ஏந்திய போராட்டம்
புதுச்சேரி, 06 மார்ச் (ஹி.ச) புதுச்சேரி மாநிலம் திருபுவனை சட்டமன்றத் தொகுதியில் உள்ள கலித்திருத்தால் குப்பம் பகுதியில் வாழ்ந்து வரும் குருவிக்கார மக்கள் பல தலைமுறைகளாக அந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இன்று வரை அந்த மண்ணில் வாழ உரிமை கூ
போராட்டம்


புதுச்சேரி, 06 மார்ச் (ஹி.ச)

புதுச்சேரி மாநிலம் திருபுவனை சட்டமன்றத் தொகுதியில் உள்ள கலித்திருத்தால் குப்பம் பகுதியில் வாழ்ந்து வரும் குருவிக்கார மக்கள் பல தலைமுறைகளாக அந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இன்று வரை அந்த மண்ணில் வாழ உரிமை கூட எங்களுக்கு கிடைக்கவில்லை.

எங்களுக்கும் வீடு வேண்டும், எங்களுக்கும் நிலம் வேண்டும், எங்களுக்கும் மனிதர்களாக வாழ உரிமை வேண்டும் என்று பல ஆண்டுகளாக முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநரை சந்தித்து கோரிக்கைகளை வைத்தோம்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தங்களை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலவச படைபட்டாவை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றத்தை நோக்கி குருவிக்கார இன மக்கள் தீபந்தத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சட்டமன்றத்தை நோக்கி புறப்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Hindusthan Samachar / GOKILA arumugam