காவிரி விவகாரத்தில் தும்பை விட்டு வாலை பிடிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு இனியாவது விழித்துக் கொள்ளுமா - டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை, 06 மார்ச் (ஹி.ச) காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரி
Pasumpon TTV Dhinakaran


Bsb


சென்னை, 06 மார்ச் (ஹி.ச)

காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கர்நாடக அரசு இன்று தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை வெற்றியாகக் கருதுவதாகவும் விரைவில் மேகதாது அணைக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

காவிரி நீரால் பாசன வசதி பெறும் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பின்பும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியான இரு தினங்களில், கர்நாடக காங்கிரஸ் அரசு தாக்கல் செய்திருக்கும் தனது நிதிநிலை அறிக்கையில் மேகதாது அணை குறித்த இத்தகைய அறிவிப்பு இடம்பெற்றிருப்பது, கூட்டணி நலனுக்காக திமுக தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுக்க முடிவெடுத்துவிட்டதோ ? என்ற ஐயம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

மேகதாது அணை விவகாரத்தில் ஆரம்பம் முதலே தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் திமுக, தன்னுடைய கட்சி நலனுக்காகவும், கூட்டணி நலனுக்காகவும் மாநிலத்தின் உரிமைகளையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்க முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, நானும் டெல்டா காரன் தான் என வாய் சவடால் விடும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி டெல்டா பகுதிகளைப் பாலை வனமாக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை சட்டரீதியாக மட்டுமின்றி, தன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தம் கொடுத்துத் தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ