Enter your Email Address to subscribe to our newsletters

லண்டன், 06 மார்ச் (ஹி.ச.)
இங்கிலாந்துக்கு சட்டத்திற்குப் புறம்பாகக் குடிபெயர்பவர்களைத் தடுக்க, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக, கல்வி விசா பெற்று இங்கிலாந்துக்குள் வந்துவிட்டு, பிறகு அங்கேயே தஞ்சம் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர், சூடான் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்துவதாக அந்த நாட்டு உள்துறை மந்திரி ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.
குறிப்பாக, ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்வி விசாவில் வந்த 95 சதவீத ஆப்கானிஸ்தானியர்கள் அங்கேயே தஞ்சம் கோரியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான புதிய சட்ட திருத்தம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
Hindusthan Samachar / JANAKI RAM