யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
புதுடெல்லி, 06 மார்ச் (ஹி.ச) 2025 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வு (CSE) இறுதி முடிவுகளை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) இன்று வெளியிட்டுள்ளது. 1087 பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 2025 இல் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு மற்றும் டிசம்பர் 20
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


புதுடெல்லி, 06 மார்ச் (ஹி.ச)

2025 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வு (CSE) இறுதி முடிவுகளை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) இன்று வெளியிட்டுள்ளது.

1087 பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 2025 இல் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு மற்றும் டிசம்பர் 2025 முதல் பிப்ரவரி 2026 வரை நடைபெற்ற ஆளுமைத் தேர்வு நேர்காணல்களைத் தொடர்ந்து முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,

இந்திய நிர்வாகப் பணி (IAS), இந்திய வெளியுறவுப் பணி (IFS), இந்திய காவல் பணி (IPS) ஆகியவற்றிற்கு மொத்தம் 958 வேட்பாளர்கள் குரூப் ஏ, மற்றும் குரூப் பி பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்வில் தேசிய அளவில் அனுஜ் அக்னிஹோத்ரி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே இரண்டாவது இடத்தையும் ஆகான்ஷ் துல் 3-வதுஇடத்தையும் பிடித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b