Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 06 மார்ச் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாந்தோணியை சேர்ந்தவர் துரைசாமி (27). இவர் மனைவி உஷாராணி (28),மகன் துருவன் (4) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு உடுமலைக்கு வந்ததாக தெரிகிறது.
பின்னர் உடுமலை தாராபுரம் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் தாந்தோணி கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிராக வந்த வேனும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் துரைசாமி, உஷாராணி, துருவன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை நீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு அவர்களை பரிசோதிக்க டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த தகவல் உடுமலை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் அங்கு வரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது உடுமலையைச் சேர்ந்த வெங்கடேஷ் குமார் (36) என்பவர் வேனை ஓட்டி வந்தபோது மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
அத்துடன் காயமடைந்த வேன் டிரைவர் வெங்கடேஷ் குமார் உடுமலை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Hindusthan Samachar / ANANDHAN