Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மார்ச் (ஹி.ச.)
சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த மாதம் (பிப்ரவரி) 20-ஆம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பெறப்பட்டு வருகின்றன.
தற்போதுள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.
அதே போல, திமுகவின் நிர்வாகிகள் பலரும் ஆர்வமாக விருப்ப மனுக்களை கொடுத்து வருகிறார்கள்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி (தனி) தொகுதியில் மறுபடியும் போட்டியிட நேற்று விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி முன்னாள் எம்.பி., எஸ்.ஆர்.ஜெயதுரை சென்னை ஆயிரம் விளக்கு, தியாகராயநகர் ஆகிய தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தார்.
மேலும்,வீரபாண்டிய கட்டப்பொம்மன் மாதிரி வேடம் அணிந்த ஒருவரை அழைத்து வந்து இளைய கட்டப்பொம்மன் என்பவர் விருப்ப மனு கொடுத்தார்.
அவர் கூறியதாவது,
நாங்கள் கட்டபொம்மனின் 8-வது பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.
அதனால் கட்டபொம்மன் அடையாளத்துடன் வந்துள்ளேன்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் ஒரு மனுவையும், திருத்தணி தொகுதிக்கு என் பெயரிலும் ஒரு மனுவையும் கொடுத்துள்ளேன். என்றார்.
தி.மு.க-வில் விருப்ப மனு கொடுப்பது இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் முடிகிறது.
ஆகவே, அண்ணா அறிவாலயத்தில் இன்று எப்போதும் இருப்பதை விட கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM