தனியார் பெயிண்ட் கடையில் மீண்டும் தீ விபத்து
திருவள்ளூர் , 06 மார்ச் (ஹி.ச) திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சென்னீர்குப்பத்தில் இயங்கி வரும் தனியார் பெயிண்ட் கடையை குடோனாகவும் உபயோகித்து வந்துள்ளனர். இந்த பெயிண்ட் கடை அருகே மேலும் சில கடைகளும் உள்ளன. இதனிடையே, இந்த பெயிண்ட் கடையில் நே
fire breaks out at a private paint shop


திருவள்ளூர் , 06 மார்ச் (ஹி.ச)

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சென்னீர்குப்பத்தில் இயங்கி வரும் தனியார் பெயிண்ட் கடையை குடோனாகவும் உபயோகித்து வந்துள்ளனர்.

இந்த பெயிண்ட் கடை அருகே மேலும் சில கடைகளும் உள்ளன.

இதனிடையே, இந்த பெயிண்ட் கடையில் நேற்று (மார்ச் 05) மாலை திடீரென தீப்பற்றியது.

தீ மளமளவென பெயிண்ட் கடை முழுவதும் பரவியது.

தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்

நிலையில், பெயிண்ட் கடையில் இன்று (மார்ச் 06) காலை மீண்டும் தீப்பற்றியுள்ளது.

தீ மீண்டும் மளமளவென கடை முழுவதும் பரவியது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b