Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மார்ச் (ஹி.ச.)
பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற இன்றைய (மார்ச் 06) நாளில் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவிக்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
மார்ச் 6: அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்
1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவிக்க இருக்கிறேன்!
திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, திராவிட மாடல் 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்... உங்கள் அனைவரின் ஆதரவோடும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b