வினாத்தாள் குறைவு விவகாரம் - உண்மையை மறைத்த அதிகாரிகள் நீக்கம்!
கரூர், 07 மார்ச் (ஹி.ச.) கரூர் மாவட்டம் துளசி கொடும்பில் உள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில், 12-ம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வின் போது வினாத்தாள் எண்ணிக்கை குறைவாக இருந்ததை உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மறைத்த தேர்வு மையக் கண்காணிப்பாளர் மற்றும்
Exam


கரூர், 07 மார்ச் (ஹி.ச.)

கரூர் மாவட்டம் துளசி கொடும்பில் உள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில், 12-ம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வின் போது வினாத்தாள் எண்ணிக்கை குறைவாக இருந்ததை உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மறைத்த தேர்வு மையக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் ஆகிய இருவரைப் பணியிலிருந்து விடுவித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கரூரில் 12-ம் வகுப்பு பொது தேர்வின் போது வினாத்தாள் எண்ணிக்கை குறைந்ததை மறைத்த தேர்வு மையக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் ஆகிய இருவரை பணியில் இருந்து விடுவித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் துளசி கொடும்பு-வில் தனியார் பள்ளி மையத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் பாடத் தேர்வின்போது வினாத்தாள் எண்ணிக்கை குறைவாக இருந்ததை மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மறைத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விளக்கம் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN