Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 07 மார்ச் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஷ் அவரது நண்பர் சகோதரியை, காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அப்போது அவருக்கு வயது 16 என்பதால், மகேஷ் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருமணம் செய்துகொண்டு, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 1098 குழந்தைகள் உதவி எண்ணுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இருவரையும் மீட்டு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம், 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மகேஷ் மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலா,
வயதை உறுதி செய்வதற்கான அசல் ஆவணங்கள் இருந்தும் தாக்கல் செய்யப்படாத நிலையில், அவற்றை ஆதாரமாக ஏற்க முடியாது. வயது நிரூபிக்கப்படாததால் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
ஆகவே தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
ஒப்புதல் காதல் உறவுகள், பெற்றோரின் எதிர்ப்பால் பின்னர் போக்சோ வழக்குகளாக மாறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற வழக்குகளில் நீண்ட காலம் சிறையில் இருக்க நேரிடுவது கவலை அளிக்கிறது.
போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் மூலம் பரவலாக விளம்பரம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்த தமிழக அரசின் முதன்மை செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த உத்தரவுகளை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசின் முதன்மை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam