வெயிலிலிருந்து தூய்மை பணியாளர்கள் தங்களது உடல் நிலையை பாதுகாக்க தூய்மை பணியாளர்களுக்கு தொப்பி வழங்கப்பட உள்ளது - சென்னை மேயர் பிரியா அறிவிப்பு
சென்னை, 07 மார்ச் (ஹி.ச.) கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் பல்வேறு நிலையில் பணிபுரியும் 29,461 தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்
Priya


சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)

கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் பல்வேறு நிலையில் பணிபுரியும் 29,461 தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு மோர்களை வழங்கினார்.

சென்னை மாநகராட்சியின் கீழ் பணிபுரியும் நிரந்தர சுய உதவிக் குழு மற்றும் தனியார் நிறுவனத்தின் மூலம் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள், மயான பூமிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பொதுக் கழிவுறைகளில் துப்புரவு பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள், மாநகராட்சியின் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானப் பணியாளர்கள் மற்றும் களப்பணியில் ஈடுபடும் சாலை பணியாளர்கள் என மொத்தம் 29,461 தூய்மை பணியாளர்களின் உடல் நீர்ச்சத்தை பராமரிக்கவும் உடல் வெப்பத்தை தணிக்கவும் கோடை காலங்களில் குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து கோடை காலங்களான மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஆவின் நிறுவனத்திடம் இருந்து குளிர்ச்சியான 200 மில்லி லிட்டர் மோரை ரூபாய் 8 விலைக்கு கொள்முதல் செய்து தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா,

முதலமைச்சர் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

கோடைகாலத்தை முன்னிட்டு ஒவ்வொரு தூய்மை பணியாளர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நீர் சத்து குறையாமல் இருக்க மோர் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

தூய்மை பணியாளர்களின் பணி மிக முக்கியமான பங்கு, சென்னை மாநகராட்சியை சிங்காரமாக வைக்கக்கூடிய பணி தூய்மை பணியாளர்களின் பணி.

வெயில் மழையென தூய்மை பணியாளர்கள் தங்களுடைய வேலையை செய்து வருகிறார்கள்.

தூய்மை பணியாளர்களை அரசு தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது.

ஜூன் மாதம் முடியும் வரை தூய்மை பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கப்படும்.

வெயிலிலிருந்து தூய்மை பணியாளர்கள் தங்களது உடல் நிலையை பாதுகாக்க தூய்மை பணியாளர்களுக்கு தொப்பி வழங்கப்பட உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ