சென்னையில் கணவரை கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசிய மனைவி கைது
சென்னை, 07 மார்ச் (ஹி.ச.) சென்னை அண்ணாநகர் கிழக்கு ஓ பிளாக் 29 வது தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாயில் இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கடந்த 5 ஆம் தேதி அண்ணாநகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு
கைது


சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)

சென்னை அண்ணாநகர் கிழக்கு ஓ பிளாக் 29 வது தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாயில் இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கடந்த 5 ஆம் தேதி அண்ணாநகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று கால்வாயில் இறந்து கிடந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குறிப்பாக சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

5 ஆம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கோணிப்பை ஒன்றை இழுத்து சென்று கால்வாயில் வீசியது பதிவாகி இருந்தது.

பின்னர் போலீஸார் சி.சி.டிவி காட்சியில் பதிவான அடையாளங்களை வைத்து விசாரணை மேற்கொண்டதில் கோணிப்பையை கால்வாயில் வீசிய பெண் அண்ணாநகர் கிழக்கு அன்னை சத்யா நகர் ஏழாவது தெருவை சேர்ந்த அம்பிகா(57) என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து போலீஸார் சந்தேகத்தின் பேரில் நேற்று அம்பிகாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் கழிவுநீர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் அம்பிகாவின் கணவர் சந்தானம் (60) என்பது தெரிய வந்தது.

இந்த தொடர் விசாரணையில் கொலையுண்ட சந்தானம் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அம்பிகாவை திருமணம் செய்து கொண்டதும், கணவன் மனைவி இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் அம்பிகா தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்துள்ளார். அவரது கணவர் சந்தானம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும், கொலையுண்ட சந்தானம் தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவி அம்பிகா அடித்து சித்திரவதை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது .

இதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சந்தானம் வழக்கம் போல் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் .

இதில் ஆத்திரமடைந்த மனைவி அம்பிகா வீட்டில் இருந்து கத்தியை எடுத்து கணவரை வயிற்று பகுதியில் குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் இறந்த உடலை என்ன செய்வது என்று தெரியாமல் அம்பிகா ஐந்து நாட்கள் கணவர் உடலை வீட்டிலேயே வைத்திருந்த நிலையில் 5 ஆம் தேதி கணவர் சந்தானம் உடலை ஒரு கோணிப்பையில் வைத்து கட்டி இழுத்துக் சென்று வீட்டருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் வீசி விட்டு ஒன்றும் தெரியாமல் வீட்டிற்கு வந்தது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam