Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 மார்ச் (ஹி.ச)
ரேஷன் கடைகளில், மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ நாப்கின்களை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மானிய விலையில் நாப்கின்கள் கிடைக்கச் செய்யும் வகையில், முதல்வர் மருந்தகங்கள் திட்டம் விரிவுபடுத்த உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது
கூட்டுறவு சங்கங்கள் மூலம் துவங்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மானிய விலையில் நாப்கின்கள் விற்கப்படுகின்றன என தமிழக அரசு தெரிவித்துள்ளது .
கூடுதல் முதல்வர் மருந்தகங்கள் துவங்குவது குறித்த விவரங்களை அரசு தெரிவிக்கும் என உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை விரைந்து அதிகரிக்க முயற்சிக்க அரசுக்கு அறிவுறுத்தி
வழக்கு விசாரணை ஏப்ரல் 29 ம் தேதிக்கு தள்ளிவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ