Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து போர் செய்வதால், மத்திய கிழக்கு நாடுகள் பதற்றமாக உள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பது தடைபட்டுள்ளது.
எனவே, இந்தியா தற்காலிகமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதித்துள்ளது.
இந்திய அரசு கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் நள்ளிரவில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
வணிக சிலிண்டர் விலை ரூ.114.50 மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 அதிகரித்துள்ளது.
சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டர் ரூ.1,929-லிருந்து ரூ.2,043.50-க்கும், 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.868.50-லிருந்து ரூ.928.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM