Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)
மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோரோலா ரேஸர் 70 விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அதாவது சீனாவில் டிஇஎன்ஏஏ சான்றிதழ் தளத்தில் இந்த போன் காணப்பட்டுள்ளது.
எனவே வரும் வாரங்களில் சீனாவில் மோட்டோரோலா ரேஸர் 70 போன் அறிமுகமாகும். அதன்பின்பு இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
அதுவும் மோட்டோரோலா ரேஸர் 70 போன் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த மோட்டோரோலா ரேஸர் 70 ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
மோட்டோரோலா ரேஸர் 70 அம்சங்கள்:
6.9-இன்ச் ஒஎல்இடி மெயின் டிஸ்பிளே உடன் இந்த மோட்டோரோலா ரேஸர் 70 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த மெயின் டிஸ்பிளேவில் 1080 x 2640 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
அதே போல் இந்த ஸ்மார்ட்போனில் 3.63-இன்ச் கவர் டிஸ்பிளே வசதியும் உள்ளது. இந்த சிறிய டிஸ்பிளே ஆனது 1056 x 1066 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை தரும்.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7400எக்ஸ் சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப் மற்றும் வீடியோக எடிட்டிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 18ஜிபி ரேம் + 1டிபி மெமரி என நான்கு வேரியண்ட்களில் மோட்டோரோலா ரேஸர் 70 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த போனின் எடை 188 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் மோட்டோரோலா ரேஸர் 70 போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனின் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
4500எம்ஏஎச் பேட்டரி உடன் மோட்டோரோலா ரேஸர் 70 போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாதனம் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த மோட்டோரோலா ரேஸர் 70 போனில் உள்ளன.
அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM