குஜராத் பாஜக எம்எல்ஏ கோவிந்த் பர்மாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
புதுடெல்லி, 07 மார்ச் (ஹி.ச.) நேற்று (மார்ச் 6) தனது 72 வயதில் காலமான குஜராத் பாஜக எம்எல்ஏ கோவிந்த்பாய் பர்மாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்எல்ஏ பர்மாரின் மறைவு செய்தி அறிந்து பிர
குஜராத் பாஜக எம்எல்ஏ கோவிந்த் பர்மாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்


புதுடெல்லி, 07 மார்ச் (ஹி.ச.)

நேற்று (மார்ச் 6) தனது 72 வயதில் காலமான குஜராத் பாஜக எம்எல்ஏ கோவிந்த்பாய் பர்மாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்எல்ஏ பர்மாரின் மறைவு செய்தி அறிந்து பிரதமர் மோடி ஒரு எக்ஸ் பதிவில், சமூக நல நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாக குறிப்பிட்டார்.

இது குறித்து பிரதமர் மோடி,

குஜராத் சட்டமன்ற உறுப்பினரான கோவிந்த்பாய் பர்மாரின் மறைவு செய்தியால் நான் வருத்தமடைந்தேன். அவர் எப்போதும் சமூக நல நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.

மறைந்த ஆன்மாவின் சாந்திக்காகவும், துயருற்ற குடும்பத்தினருக்கு மனமார்ந்த இரங்கல் தெரிவிக்கவும் பிரார்த்தனைகள்.

ஓம் சாந்தி!.

என்று பதிவிட்டுள்ளார்.

பர்மா, குஜராத்தில் உள்ள உம்ரேத்தைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவாக இருந்தார.

மேலும் அவரது அக்கறையான அணுகு முறைக்காக பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM