Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 07 மார்ச் (ஹி.ச.)
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறுவதால், அமெரிக்க ராணுவத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.
தொடர்ந்து போர் நடந்தால், அமெரிக்காவிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிரான தாக்குதலில் ஒரு நாளைக்கு ரூ.8,180 கோடி செலவு செய்யப்படுவதாக அமெரிக்க ஆய்வு அறிக்கையில் தகவல் வந்துள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு முதல் 100 மணி நேரத்தில் ரூ.33,966 கோடி செலவாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது நடத்தப்படும் தாக்குதலால் அமெரிக்காவுக்கு செலவு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM