Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 07 மார்ச் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நத்தம் சிவசங்கர் பேசிக் கொண்டிருக்கும் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மைக்கை பிடிங்கியதால் பரபரப்பு நிலவியது.
மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு என பொய் பிம்பம் காட்டுவதாக மைக்கை பறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளருக்கும் நாம் தமிழர் கட்சி நாங்குநேரி மற்றும் அம்பாசமுத்திரம் வேட்பாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல்துறையினர் இரு தரப்பையும் சமரசம் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை உரையாற்ற விடாமல் அடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam