Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 மார்ச் (ஹி.ச.)
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிக்கருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவானது ஏப்ரல் 10 அன்று விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
விவாகரத்து மனுவில், விஜய் மீது சங்கீதா திருமணம் மீறிய உறவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதையடுத்து, நடிகை த்ரிஷாவுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றார்.
அது குறித்த வீடியோவை கண்ட அவரது கட்சியினரும், ரசிகர்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ஏராளமான கேலி, கிண்டல் விமர்சனங்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தற்போது தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் விஜய் மனைவி சங்கீதா கூறியிருப்பதாவது:
என்னை வீட்டுக்குள் விஜய் அனுமதிக்க மறுக்கிறார்.
கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கும், குழந்தைகளுக்கு நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும்
வீடின்றி தவிக்கும் எனக்கு, விவாக ரத்து வழக்கு முடியும் வரை, சகல வசதிகளுடன் நீலாங்கரை வீட்டில் தங்க என்னை அனுமதிக்க வேண்டும்.
இதற்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
எனக்கும், குழந்தைகளுக்கும் சேர வேண்டிய சொத்துக்களை விஜய் நியாயமாக வழங்க வேண்டும்
இவ்வாறு மனுவில் விஜய் மனைவி சங்கீதா கூறி இருக்கிறார்.
தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தற்போது சங்கீதா மீண்டும் மனு தாக்கல் செய்து இருப்பது விஜய்க்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b