Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளுக்காக துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர், இளநிலை உதவியாளர், கணக்காளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் தொடர்பான பணிகள் அதிகரிக்கும் என்பதால் அந்த பணிகளை மேற்கொள்ள கூடுதல் அதிகாரிகளை பணியமர்த்தும் போது 1249 கூடுதல் பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, துணை ஆட்சியர், துணை தாசில்தார், உதவியாளர், இளநிலை உதவியாளர், கணக்காளர், தட்டச்சர் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் உருவாக்கி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில், மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்துதல், தேர்தல் அலுவலர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்தல், பதற்றமான வாக்கு சாவடிகளை கண்டறிதல், மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டத்தை உருவாக்குதல், பல்வேறு தேர்தல் பணிகள் தொடர்பாக தினசரி அறிக்கை தயாரித்தல், வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள இந்த பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் அனைத்தும் ஜூன் 30-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b