அதிமுக சார்பில் மகளிர் தின விழா - எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
சேலம் , 08 மார்ச் (ஹி.ச) சேலத்தில் அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு கேக் வெட்டினார். பின்னர் கேக்கை மகளிர் அணியினருக்கு வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். இதில்
அதிமுக சார்பில்  மகளிர் தின விழா - அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்பு


சேலம் , 08 மார்ச் (ஹி.ச)

சேலத்தில் அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு கேக் வெட்டினார்.

பின்னர் கேக்கை மகளிர் அணியினருக்கு வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஏற்காடு எம் எல் ஏ சித்ரா, அதிமுக மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகளிர் உரிமைத் தொகை ரூ 2,000 ஆக உயர்த்தி நான் அறிவித்திருந்தேன் இதை தான் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இலவசம் கூடாது என்ற விஜய் தற்போது இலவசங்களை அறிவித்திருப்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

ஒவ்வொரு கட்சியும் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி தரும். எங்களது கட்சியும் தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் என்னென்ன செய்தோம் எனத் தெளிவாக ட்விட்டரில் விளக்கி உள்ளோம். அதன்படி, அதிமுக ஆட்சி அமைந்ததும் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

‘அம்மா இருசக்கர வாகனம்’ தரப்படும் என அறிவித்து இருக்கிறோம். 5 லட்சம் மகளிருக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளோம். அவற்றை செய்வோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Hindusthan Samachar / vidya.b