Enter your Email Address to subscribe to our newsletters

துபாய், 08 மார்ச் (ஹி.ச.)
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் தொடங்கி ஒரு வாரத்தை எட்டியுள்ளது.
ஈரானின் தலைவர் கொலையுண்டதற்கு பழிவாங்காமல் விடமாட்டோம் என்று ஈரான், வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உட்பட ஏழு நாடுகளைத் தாக்குவதால், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
துபாய் விமான நிலையம் உலக அளவில் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்று.
இதன் மீதும் ஈரான் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, விமான நிலையம் மூடப்பட்டது.
பிறகு, கொஞ்சம் சேவைகள் திரும்பத் தொடங்கப்பட்ட நிலையில், மறுபடியும் துபாய் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால், விமானத்துக்காகக் காத்திருந்த பயணிகள் அங்கிருந்த ரயில்வே சுரங்கப்பாதையை நோக்கி ஓடினர்.
எமிரேட்ஸ் நிறுவனம், விமான சேவைகள் எப்போது தொடங்கும் என்ற தகவல் வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM