Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 08 மார்ச் (ஹி.ச.)
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (20) என்பவரும், இவரது நண்பர் பிரேம்குமார் (20) என்வரும் இருசக்கர வாகத்தில் செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மாமண்டூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது சதீஷ்குமார் ஓட்டி சென்ற யமஹா ஆர் 15 மீது கார் லேசாக உரசி சென்றது.
அப்போது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் சென்ற சதீஷ்குமார் மற்றும் பிரேம்குமார் ஆகிய இருவரும் கிழே விழுந்த போது, பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து சதீஷ்குமார் தலையில் ஏறியதால் சம்பவ இத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த படாளம் போலீசார், உயிரிழந்த சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த பிரேம்குமாரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மீது சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்த சதீஷ்குமார் உடலை, செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் பிரேத பரிசோதனை செய்யவில்லை என கூறி உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தீடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சதீஷ்குமார் உடலை விரைந்து பிரேத பரிசோதனை செய்து தரப்படும் என உறுதியளித்த பிறகே போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN