சென்னை-கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் சேவை மார்ச் 10, 12 ஆகிய தேதிகளில் ரத்து
சென்னை, 08 மார்ச் (ஹி.ச.) சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் மீஞ்சூர் - பொன்னேரி இடையே பொறியியல் பணி நடைபெற உள்ளதால், சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில் சேவை மார்ச் 10, மற்றும் 12-ம் தேதிகளில் ரத்து செய்யப்பட உள்ளது. இது குறித்த
சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில் சேவை மார்ச் 10, 12 ஆகிய தேதிகளில் ரத்து


சென்னை, 08 மார்ச் (ஹி.ச.)

சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் மீஞ்சூர் - பொன்னேரி இடையே பொறியியல் பணி நடைபெற உள்ளதால், சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில் சேவை மார்ச் 10, மற்றும் 12-ம் தேதிகளில் ரத்து செய்யப்பட உள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப் பூண்டிக்கு மார்ச் 10, 12 ஆகிய தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் ரயில், மீஞ்சூர் - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

கும்மிடிப்பூண்டி- சென்னை சென்ட்ரலுக்கு மார்ச் 11, 13 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - மீஞ்சூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

மின்சார ரயில் ரத்து:

அரக்கோணம் - ஜோலார் பேட்டை மார்க்கத்தில் பச்ச குப்பம் யார்டில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், மெமு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, காட்பாடி - ஜோலார்பேட் டைக்கு இன்று காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில், ஜோலார்பேட்டை - காட்பாடிக்கு இன்று நண்பகல் 12.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆகிய 2 ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b