Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை இயல்பை விட 2, 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே போன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் நாளை லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இன்று வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM