Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 மார்ச் (ஹி.ச)
உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
சமூகத்தின் அடிமை விலங்குகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
பெண்களுக்கான திட்டங்களைச் சலுகைகளாக அல்லாமல், உரிமைகளாக்கி - “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” என வீறுநடைப் போட செய்திருக்கிறது நம் திராவிடமாடல் அரசு!
இந்தியாவுக்கே வழிகாட்டும் மகளிர் நலத் திட்டங்கள் மென்மேலும் தொடர, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கரத்தை அனைவரும் இணைந்து வலுப்படுத்துவோம்.
மகளிர் உயர மாநிலம் உயரட்டும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b