மானாமதுரையில் சிகிச்சையில் இறந்த கைதி ஆகாஷின் தந்தை போலீசார் மீது குற்றச்சாட்டு
மானாமதுரை, 08 மார்ச் (ஹி.ச) சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சீயோன் நகர் பகுதியில் ஏற்பட்ட தகராறில் ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மற்றும் அழகர் ஆகிய இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு
Father of prisoner Akash,


மானாமதுரை, 08 மார்ச் (ஹி.ச)

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சீயோன் நகர் பகுதியில் ஏற்பட்ட தகராறில் ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மற்றும் அழகர் ஆகிய இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சி.சி.டி.வி. காட்சியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில், இருவர் ஒருவரை அரிவாளால் வெட்டும் காட்சியும் மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் மற்றொருவரைத் துரத்தும் காட்சியும் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகிய இருவரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக கைது செய்ய முயன்ற போது போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஆகாஷுக்கு கால் முறிந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

இந்நிலையில் மதுரை அரசு ராஜ மருத்துவமனையில் காவல்துறை கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம் கைது செய்ய முயன்ற போது தப்பி ஓடியதால் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாகக் கூறி போலீசார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஆகாஷ் உயிரிழந்ததாகவும், காவலர்கள் கூறிய நிலையில் அவரை அடித்து கொலை செய்துள்ளனர் என அவரது பெற்றோர் மற்றும் குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு மதுரை - ராமேஸ்வரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஆகாஷின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, உயிரிழந்த ஆகாஷின் தந்தை கண்ணன் செய்தியாளர்களுக்கு கூறியிருப்பதாவது,

ஆகாஷ் மீது ஒரு அடிதடி வழக்கு இருந்ததினால் அவரை தேடுகிறோம். என்று கூறி என்னை அழைத்துச் சென்று வைத்திருந்தார்கள். அப்போது உன் மகன் வந்தால் தான் உன்னை விடுவோம் என்று கூறினார்கள். கடைசியில் ஆகாஷை பிடித்துவிட்டோம் என்று கூறினார்கள்.

அதன் பிறகு அவரை காவல் நிலையத்திற்கு தானே கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இவர்கள் எங்கேயோ கொண்டு சென்று கீழே ஒரு கல்லை வைத்து காலை மேலே வைத்து அதற்கு மேல் கல்லை ஒடித்துள்ளனர். இதனால் ரத்தம் முழுவதும் வெளியே வந்துள்ளது. அதற்குப் பிறகு சிவகங்கையில் வைத்திருந்தனர். ஜாதியின் பேரில் செய்துவிட்டார்கள்.

சிவகங்கையில் இருந்து ஆகாஷை மதுரைக்குக் கொண்டு வந்தது எங்களுக்கே தெரியாது. அதற்கு பிறகுதான் இரு போலீசார் போன் செய்து கூறினர். அதில் டிரஸ் எடுத்து கொண்டு வாருங்கள் ஆகாசுக்கு இப்படி ஆகிவிட்டது என்று தெரிவித்தனர். அதன் பிறகு தான் என் மனைவியிடம் துணியை எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்று சொன்னேன். அதன்படி பார்க்கச் சென்றவர்களிடம் இரவு ஆகாஷ் பேசியுள்ளான். அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளான். ஆனால் காலையில் ஆகாஷ் இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.

இதனை எப்படி நம்புவதாக உள்ளது?

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b