Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 08 மார்ச் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்ட வரலாற்று சுவடுகளில் முக்கியத்துவம் பெற்ற செஞ்சிக் கோட்டையில் மூன்று குன்றுகளில் அமைந்துள்ளது. 13-ம் நூற்றாண்டில் உருவான கோட்டை இது.
தமிழக மன்னர்களின் பங்களிப்புடன், அவ்வபோது பொலிவு பெற்று வந்துள்ளது. கோயில்கள், அகழி, படைவீடுகள், வெடிமருந்து கிடங்கு, பீரங்கி மேடை என பல அம்சங்களை கொண்டது.யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக செஞ்சிக் கோட்டை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, செஞ்சிக் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் இலவச நுழைவு அனுமதிக்கப்படுகிறது என தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
செஞ்சிக் கோட்டைக்கு வரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.25-ம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.250-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b