Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 மார்ச் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 28 சட்டசபை தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் ராஜ்யசபா எம்.பி ஆகிறார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 8) நடைபெற்றது.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையில், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக கூட்டணியில் 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நிர்வாகிகளுடன் முக்கிய விவாதம் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் முடிந்து புறப்பட்ட கிரிஷ் சோடங்கர் திடீரென மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை சீரானது.
இதையடுத்து, அவர் உடனடியாக விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
காலையில் இருந்து நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்றதால் உணவு உட்கொள்ளவில்லை.
அதனால் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b