Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 08 மார்ச் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்ட கியூ பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ராமநாதபுரம் நேரு நகர் மூன்றாவது வீதியில் உள்ள ஒரு வீட்டை இன்று அதிகாலை அதிரடியாக சோதனை செய்தனர்.
இந்த சோதனையின் போது 25 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் ஐஸ் போதை பொருட்கள், 25 கிலோ ஹெராயின் மற்றும் 215 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்து அந்த வீட்டில் இருந்த மூன்று பேரை கைது செய்து இராமநாதபுரம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து அவரை அழைத்து வந்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் க்யூபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிபட்ட பொருள்களின் மதிப்பு சர்வதேச சந்தையில் 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுவதால் ராமநாதபுரத்தில் இந்த கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN