தாய்மார்கள், சகோதரிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - ஹெச்.ராஜா
சென்னை, 08 மார்ச் (ஹி.ச.) பாரத தேசத்தை பாரத அன்னை வடிவிலே வழிபடுகிற நாம், மகளிர் தினத்தில் பெண்மையை போற்றுவோம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எக்ஸ் தளத்தில் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்ட
Hraja


Hs


சென்னை, 08 மார்ச் (ஹி.ச.)

பாரத தேசத்தை பாரத அன்னை வடிவிலே வழிபடுகிற நாம், மகளிர் தினத்தில் பெண்மையை போற்றுவோம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எக்ஸ் தளத்தில் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்கிற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் வரிகள் பெண்மை எவ்வளவு புனிதமானது என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளதை சிந்தித்துப் பார்ப்போம்

பத்துத் திங்கள் கருவிலே ஒரு சிசுவை சுமந்து சொல்லொணா சிரமங்களை அனுபவித்த போதும் அகமகிழ்வோடு ஒரு உயிரை பிரசவித்து இந்த பிரபஞ்சத்திற்குத் தரும் பேராற்றல் பெற்ற ஆன்மா தானே பெண் எனும் பெருமை மிக்க பிறவி, அதனால் தானே நதிகளையும், மொழிகளையும், மண்ணையும் நம் தாயாக போற்றி வணங்குகிறோம்

இந்த பிரபஞ்சத்தை படைத்த எல்லாம் வல்ல பரம்பொருளான அந்த பரமேஸ்வரனே தன் சரீரத்தில் சரி பாதியை உமையவளுக்குத் தந்து உமா மகேஸ்வரனாக சக்தி இல்லையேல் சிவன் இல்லை என பெண்மையின் மேன்மையை மனித குலத்திற்கு உணர்த்திய மகத்தான தர்மத்தை பின்பற்றுகிற தேசத்தில் பிறந்தவர்களான நாம்.

பாரத தேசத்தை பாரத அன்னை வடிவிலே வழிபடுகிறோம், மகளிர் தினத்தில் பெண்மையை போற்றுவோம்.

தாய்மார்கள், சகோதரிகள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ