ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண் - ஓ.பி.எஸ்ஸின் மகளிர் தின வாழ்த்து!
சென்னை, 08 மார்ச் (ஹி.ச.) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் தள பக்கத்தில், பெண்ணின் உயர்வினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8-ஆம் நாள் “சர்வதேச மகளிர் தினமாக” கொண்டாட
Ops


சென்னை, 08 மார்ச் (ஹி.ச.)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் தள பக்கத்தில்,

பெண்ணின் உயர்வினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8-ஆம் நாள் “சர்வதேச மகளிர் தினமாக” கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், அனைத்து மகளிர்க்கும் எனது உளங்கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஐந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில், கட்டணமில்லாமல் அனைத்துப் பெண்களும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக விடியல் பயணம் திட்டம், ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், பெண்களின் உயர் கல்விக்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம், வேலைக்கு செல்லும் மகளிர் பாதுகாப்பாகத் தங்கும் வகையில் தோழி விடுதி திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கு உதவும் வகையில் பெண்கள் நல வாரியம், அரசு வேலைவாய்ப்பில் 40 விழுக்காடு இட ஒதுக்கீடு என பல்வேறு மகளிர் முன்னேற்றத் திட்டங்கள் மூலம் மகளிருக்கு பொருளாதார சுதந்திரத்தை பெற்றுத் தந்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin.

“ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண்” என்பதற்கேற்ப, இந்த திராவிட மாடல்

ஆட்சியில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நன்னாளில், மகளிர் பெற்ற வெற்றிகளுக்கு எனது பாராட்டுகள். மலரவிருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் அடையவிருக்கும் வெற்றிகளுக்கு எனது நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டு உள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN