செப்டம்பர் 17 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
மதுரை, 08 மார்ச் (ஹி.ச) உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2009 ஏப்ரல் 8 ம் தேதி நடைபெற்றது. அடுத்த 12 ஆண்டுகளில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்ரவரி 26ல் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட
Kumbabhishekam at Madurai Meenakshi Amman Temple on September 17th


மதுரை, 08 மார்ச் (ஹி.ச)

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2009 ஏப்ரல் 8 ம் தேதி நடைபெற்றது.

அடுத்த 12 ஆண்டுகளில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் 2018 பிப்ரவரி 26ல் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மண்டபம் சீரமைப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கும்பாபிஷேகம் தள்ளிப்போனது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிதி ரூ.15.81 கோடி மற்றும் உபயதாரர் நிதி ரூ.5.16 கோடி என மொத்தம் ரூ.32.28 கோடியில் 186 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல் சீரமைக்க ரூ.3530 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்மாதம் இறுதிக்குள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் கோயில் திருப்பணிகள், வீரவசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகள் மார்ச் இறுதிக்குள் நிறைவடைந்தாலும், சித்திரைத்திருவிழா என அடுத்தடுத்து நடக்கும் கோயில் திருவிழாக்களுக்கு இடையூறு இல்லாமல் வரும் செப்கம்பர் 17ல் (ஆவணி 31-ம் தேதி) காலை 7:45 மணி முதல் 810 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b