மந்தைவெளியில் வீடு புகுந்து தூய்மை பணியாளர் வெட்டி படுகொலை - இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் வெறிச்செயல்
சென்னை, 08 மார்ச் (ஹி.ச.) சென்னை மந்தைவெளி சின்ன காரக்குட்டை பாரதி நகரை சேர்ந்தவர் நிசாந்த் (36). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். மேலும் நிசாந்த் அவ்வபோது கிடைக்கும் வேலையை செய்து பிழைப்பு நடத்தி
Murder


சென்னை, 08 மார்ச் (ஹி.ச.)

சென்னை மந்தைவெளி சின்ன காரக்குட்டை பாரதி நகரை சேர்ந்தவர் நிசாந்த் (36). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

மேலும் நிசாந்த் அவ்வபோது கிடைக்கும் வேலையை செய்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று இரவு நிசாந்த் வீட்டில் மது அருந்தி கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் வீடு புகுந்து நிசாந்த்தை கத்தி மற்றும் கல்லால் அடித்து கொலை செய்து விட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.

இதில் நிசாந்த் ரத்த வெள்ளத்தில் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்து அப்பகுதி மக்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் பட்டினப்பாக்கம் போலீஸார் விரைந்து சென்று நிசாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீஸார் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நிசாந்த்தை கொலை செய்த நபர்கள் குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக கொலை நடந்தாகவும் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் கொலை நடந்த நபரின் தம்பியான நவீன் என்பவர் தனது அண்ணன் கொலை செய்யப்பட்டதை அடுத்து என்ன செய்வது தெரியாமல் பிளாட்பார்மில் தங்கி இருந்த சீனிவாசன் என்பவரை சரமாரியாக வெட்டி எனது அண்ணனின் சாவிற்கு நீங்கள் தான் காரணம் என தகாத வார்த்தைகளில் பேசி கையில் வைத்திருந்த கத்தி எடுத்து வெட்டியுள்ளார்.

வெட்டியதில் சீனிவாசன் வலது கையில் பெரிய வீட்டு காயமும் இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் பட்டினம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Hindusthan Samachar / P YUVARAJ