நாங்குநேரி இரட்டைக் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது!
நெல்லை, 08 மார்ச் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் கடந்த 2ம் தேதி இரவு புகுந்த ஒரு கும்பல் பெட்ரோல் வெடி குண்டுகளை சரமாரியாக வீசி அருவாளால் வெட்டி எது ஒரிசா மாநில தொழிலாளி திருநாத்கட்டா மற்றும் மாற்றுத்திறனாளி ஜான் மார்க்
Nanguneri


நெல்லை, 08 மார்ச் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் கடந்த 2ம் தேதி இரவு புகுந்த ஒரு கும்பல் பெட்ரோல் வெடி குண்டுகளை சரமாரியாக வீசி அருவாளால் வெட்டி எது ஒரிசா மாநில தொழிலாளி திருநாத்கட்டா மற்றும் மாற்றுத்திறனாளி ஜான் மார்க் ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளார். இதில் நெல்சன் என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விசாரணையில் ஏற்கனவே மஞ்சங் குளத்தை சேர்ந்த சாமிதுரை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பழிக்கு பழியாக, இந்த இரட்டை கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பாக தென்னி மலையைச் சேர்ந்த சுடலை கண்ணு மகன் கண்ணன் உள்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த மஞ்சங்குளத்தை சேர்ந்த மகாராஜன் என்பவரை கடந்த 4 ஆம் தேதி கைது செய்தனர்.

இவ்வாறு பிடிப்பட்ட எட்டு பேரில் கிடைத்த தகவலின் பெயரில் கூட்டாளியாக செயல்பட்ட நாங்குநேரியைச் சேர்ந்த வண்ணமுத்து என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுவரை இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் கைதாகி உள்ளனர்.

இருப்பினும் நெல்லை மாவட்டத்தில் இரட்டை கொலை சம்பவத்தால் மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலையில் வருகிறது

இந்நிலையில் சம்பவத்தில் கொலையான ஜான் உடலை உறவினர்கள் ஏழாவது நாளாக வாங்க மறுத்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜான் மார்க்கின் உடலை வாங்க மாட்டோம் என அவரது மனைவி கண்ணகி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த ஜான் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் அவரது மனைவி கண்ணகிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் இதற்கான ஆணையை உடனடியாக வழங்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN