Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 08 மார்ச் (ஹி.ச.)
இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, பல அரசியல் தலைவர்களும், முக்கியமானவர்களும் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் பெண்மணிகள் அனைவருக்கும் பிரதமர் மோடி மகளிர் தின நல்வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது;-
சர்வதேச மகளிர் தினத்தில், நம் நாட்டின் பெண் சக்திகளுக்கு எனது வாழ்த்துகளைச் சமர்ப்பிக்கிறேன்.
ஒவ்வொரு துறையிலும் பெண்கள் அவர்களின் உறுதி, புதுமையான திறமை மற்றும் ஈடு இணையற்ற மனஉறுதியோடு இந்தியாவின் வளர்ச்சியை வடிவமைக்கிறார்கள்.
அவர்களின் சாதனைகள் நமது நாட்டை உற்சாகப்படுத்துகின்றன. மேலும் முன்னேறிய இந்தியாவை உருவாக்கும் நமது நோக்கத்தை அதிகப்படுத்துகின்றன.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது நமது அரசாங்கத்தின் பலவிதமான திட்டங்கள் மற்றும் முயற்சிகளின் மையப்புள்ளியாக இருக்கிறது.
ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய முழுத் திறமையை உணர்ந்து இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்களிப்பு செய்ய உதவும் வாய்ப்புகளை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
நமது நாட்டின் பெண்களின் வெற்றிகள் நமக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகவும், நாட்டை உருவாக்குவதில் பெண்களுக்கு இருக்கும் பங்கின் வலிமையான நினைவூட்டலாகவும் உள்ளன.
இந்தியா இன்னும் வளர்ச்சி அடையும்போது, பெண்களின் விருப்பங்களும், அவர்களின் ஆதரவும் வலிமையான மற்றும் செழிப்பான தேசத்தை நோக்கிய நமது ஒட்டுமொத்தப் பயணத்தைத் தொடர்ந்து வழி நடத்தும்.
என்று அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM