Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 08 மார்ச் (ஹி.ச.)
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
‘சர்வதேச மகளிர் நாளில் அனைவருக்கும் வாழ்த்துகள்! கல்வியறிவு பெற்ற மற்றும் முன்னேற்றமடைந்த பெண்களே முன்னேற்றத்தை நோக்கியதொரு நாட்டின் தூண்களாவர்.
பெண் சக்தி தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் துணிச்சலுடன் திறம்பட ஜொலிக்கிறது. இது, செழிப்பான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்துக்கான அடித்தளத்தை பலப்படுத்துவதாக அமைகிறது.
இத்தருணத்தில், ஒவ்வொரு பெண்ணும் சம வாய்ப்புகளுடன் வளர்ச்சி பெறவும் மாண்புடனும் பாதுகாப்புடனும் சுதந்திரமாகவும் வாழவும் ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்க நமது ஒருங்கிணைந்த கடமையை மீண்டும் உறுதியேற்றுக்கொள்வோம்.
என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM