வருமானவரித்துறை அதிகாரிகள் போல நடித்து ஜவுளிக்கடையில் நூதன மோசடி!
ராமநாதபுரம், 08 மார்ச் (ஹி.ச.) ராமநாதபுரம் அக்ரஹாரம் சாலையில் இயங்கி வரும் பிரபல ஜவுளி கடையில் ஊழியர்கள் மும்முரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, காரில் இருந்து இறங்கிய மூன்று பேர் தாங்கள் வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்திருப்பதாக க
Ramanathapuram Bajar Police Station


ராமநாதபுரம், 08 மார்ச் (ஹி.ச.)

ராமநாதபுரம் அக்ரஹாரம் சாலையில் இயங்கி வரும் பிரபல ஜவுளி கடையில் ஊழியர்கள் மும்முரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, காரில் இருந்து இறங்கிய மூன்று பேர் தாங்கள் வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்திருப்பதாக கூறி முறையாக வருமான வரி செலுத்துகிறீர்களா? கொள்முதல் மற்றும் விற்பனைக்கு கணக்கு வழக்குகளை சரியாக பராமரிக்கிறீர்களா என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

வருமானவரித்துறை அதிகாரிகள் என நம்பிய கடை ஊழியர்கள் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த வாலிபர்கள், கல்லாவில் உள்ள இருப்பு பணம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

கல்லாவில் இருந்த சுமார் ஐந்து லட்சம் பணத்தையும், கடை மேலாளர் முகமது ரிஸ்வான் மற்றும் பணியாளர் முகமது சுகைன் ஆகிய இருவரையும் காரில் ஏற்றுக் கொண்டு வருமான வரித்துறை அலுவலகத்திற்கு செல்வதாக அழைத்துச் சென்றுள்ளனர்.

காரில் ஏற்றிச் சென்ற இருவரையும் நீலகண்டி ஊரணி அருகே இறக்கி விட்டு விட்டு பணத்துடன் மூன்று பேரும் தப்பியுள்ளனர்.

அப்போதுதான் அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் இல்லை என்பதும் போலி வருமானவரித்துறை அதிகாரிகள் என்பதும் ஜவுளிக்கடை மேலாளருக்கு தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி வருமானவரித்துறை அதிகாரிகளை தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN