அருணாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.1, 2.7, 2.8 அளவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - தேசிய நில அதிர்வு மையம் தகவல்
புதுடெல்லி, 08 மார்ச் (ஹி.ச.) நேற்று, அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் பகுதியில் நிலநடுக்கம் உண்டானது. நள்ளிரவு 11.55 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரு
அருணாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.1, 2.7, 2.8 அளவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - தேசிய நில அதிர்வு மையம் தகவல்


புதுடெல்லி, 08 மார்ச் (ஹி.ச.)

நேற்று, அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் பகுதியில் நிலநடுக்கம் உண்டானது.

நள்ளிரவு 11.55 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் பகுதியில் மறுபடியும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 1.10 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் பிச்சோம் பகுதியில் திரும்பவும் நிலநடுக்கம் உண்டானது. இன்று காலை 5.48 மணிக்கு இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்த விவரங்கள் எதுவும் உடனே கிடைக்கவில்லை.

முன்னதாக, ராஜஸ்தானில் ரிக்டர் 3.5 அளவில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM