நாளை வாங்க வேண்டிய குறைந்த விலை பங்குகள் - ஆனந்த் ரதி பரிந்துரை
சென்னை, 08 மார்ச் (ஹி.ச.) இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம் பெரிய சரிவைச் சந்தித்தது. ஐந்து வர்த்தக நாட்களில் ஒரு நாள் மட்டுமே ஏற்றத்துடன் முடிந்தது. மற்ற நான்கு நாட்களும் இறக்கத்தையே கண்டன. இந்தச் சூழலில், ரூ.200-க்கும் குறைவான விலையுள்ள பங்குகள
நாளை வாங்க வேண்டிய குறைந்த விலை பங்குகள் - ஆனந்த் ரதி பரிந்துரை


சென்னை, 08 மார்ச் (ஹி.ச.)

இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம் பெரிய சரிவைச் சந்தித்தது.

ஐந்து வர்த்தக நாட்களில் ஒரு நாள் மட்டுமே ஏற்றத்துடன் முடிந்தது. மற்ற நான்கு நாட்களும் இறக்கத்தையே கண்டன.

இந்தச் சூழலில், ரூ.200-க்கும் குறைவான விலையுள்ள பங்குகளை வாங்கலாம் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

சென்ற வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 1,097 புள்ளிகள் குறைந்து 78,918.90-ஆக இருந்தது. அதேபோல், நிஃப்டி 50 ஆனது 315 புள்ளிகள் குறைந்து 24,450.45-ல் முடிந்தது.

நாளை வாங்க வேண்டிய பங்குகள் பற்றி ஆனந்த் ரதியின் மெஹுல் கோத்தாரி சில பங்குகளைப் பரிந்துரைத்துள்ளார்.

ஜம்மு & காஷ்மீர் வங்கியின் பங்குகளை ரூ.119 முதல் ரூ.116-க்குள் வாங்கலாம்.

இதன் இலக்கு விலை ரூ.128 ஆகவும், ஸ்டாப்லாஸ் ரூ.111 ஆகவும் இருக்க வேண்டும்.

இர்கான் இன்டர்நேஷனல் நிறுவன பங்குகளை ரூ.147 - ரூ.145 என்ற விலையில் வாங்கலாம்.

இதன் இலக்கு விலை ரூ.160 ஆகவும், ஸ்டாப் லாஸ் விலை ரூ.140 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளை ரூ.188 – ரூ.185 விலையில் வாங்கலாம்.

இதன் இலக்கு விலை ரூ.205 ஆகவும், ஸ்டாப் லாஸ் ரூ.175 ஆகவும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM