Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 மார்ச் (ஹி.ச.)
உதிரி பாகங்களை மேம்படுத்துவதற்காக மொபைல் போனையே மாற்ற வேண்டிய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, டெக்னோ நிறுவனம் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவில் நடந்த சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சியில், டெக்னோ நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய மாடல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த போன் வெறும் 4.9 மி.மீ தடிமன் மட்டுமே உள்ளது. தற்போது விற்பனையில் உள்ள மற்ற போன்களைக் காட்டிலும் இது மிகவும் மெலிதானது.
இந்த போனின் பின்புறத்தில் காந்த அடுக்கு இருப்பதால், பவர் பேங்க், கேமரா லென்ஸ்கள், கேமிங் கிரிப்ஸ் போன்ற உதிரி பாகங்களை எளிதாக பொருத்தவோ அல்லது மாற்றவோ முடியும்.
மின்சார தேவைக்காக போகோ-பின் கனெக்டர்களும், டேட்டா பரிமாற்றத்திற்காக புளூடூத், வைஃபை மற்றும் மில்லிமீட்டர்-வேவ் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
டெக்னோ நிறுவனம் இந்த போன்களை சோதனை செய்து முடித்த பிறகு விற்பனைக்கு வரும்போது, மற்ற நிறுவனங்களும் இதற்கான உதிரி பாகங்களைத் தயாரிக்க அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM