Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 மார்ச் (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒரு வீட்டின் அச்சாணியாகவும், சமூகத்தின் முன்னேற்ற சக்தியாகவும் விளங்கும் பெண்களின் தியாகத்தையும், சாதனைகளையும் அங்கீகரிக்கும் நாள் இது.
வரலாற்றுப் பின்னணி:
இந்தத் தேதி வெறும் ஒரு அடையாளமல்ல. இது பல போராட்டங்களின் விளைவாகும்:
1908 - நியூயார்க் நகரில் சுமார் 15,000 பெண்கள் வேலை நேரம் குறைப்பு, சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை கோரி பேரணி நடத்தினர்.
1910 - கோபன்ஹேகனில் நடந்த மாநாட்டில் கிளாரா ஜெட்கின் என்பவர் சர்வதேச மகளிர் தினத்திற்கான கருத்தை முன்மொழிந்தார்.
1917 - ரஷ்யாவில் பெண்கள் ரொட்டி மற்றும் அமைதி கோரி நடத்திய மிகப்பெரிய வேலைநிறுத்தம், மார்ச் 8 அன்று தொடங்கியது.
இது அந்த நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கும், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கவும் வழிவகுத்தது.
1975 - ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை அதிகாரப்பூர்வமாக சர்வதேச மகளிர் தினமாக அங்கீகரித்தது.
2026-ஆம் ஆண்டின் கருப்பொருள்:
ஐக்கிய நாடுகள் சபை 2026-ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக உரிமைகள், நீதி, செயல்பாடு: அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக என்பதை அறிவித்துள்ளது. மேலும், 'கொடுப்பதன் மூலம் பெறுவோம்' என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகிறது.
மகளிர் தின வாழ்த்து & பொன்மொழி:
வாழ்த்து - சமூகத்தின் தூண்களான பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.
பொன்மொழி - நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை - பெண்மையின் வலிமையைப் போற்றும் பாரதியார் வரிகள்.
Hindusthan Samachar / JANAKI RAM