Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 08 மார்ச் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக மாநாட்டையொட்டி திருச்சி மாவட்டத்தில் அன்று காலை 6 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து அம்மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
கரூர், தொட்டியம் வழியாக வரும் வாகனங்கள் குளித்தலை, துறையூர், நாகலாபுரம், நக்கசேலம், செட்டிகுளம், இரூர், ஆலத்தூர், நெடுங்கூர், சிறுகனூர் வழியாக வந்து மாநாட்டு திடலுக்குச் சென்று, மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
மதுரை வழியாக வரும் வாகனங்கள் துவரங்குறிச்சி, விராலிமலை, பஞ்சப்பூர், மன்னார்புரம், நம்பர் 1 டோல்கேட் ஒய் சாலை, பனமங்கலம் சென்று, அங்கிருந்து சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக குமுளூர் பிரிவுச் சாலை, தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூர் வந்து மாநாட்டு திடலுக்குச் சென்று, மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
தஞ்சாவூர் டெல்டா பகுதியிலிருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் தஞ்சாவூர், திருமலைசமுத்திரம், பூதலூர், பூண்டி, செங்கரையூர் பாலம், அன்பில், பூவாளூர், குமுளூர், தச்சங்குறிச்சி வழியாக மாநாட்டுத் திடலுக்கு சென்று, மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
கடலூர், அரியலூர் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் அரியலூர், குன்னம், பெரம்பலூர், சிறுவாச்சூர், ஆலத்தூர், பாடாலூர், சிறுகனூர் வழியாக மாநாட்டுத் திடலுக்கு சென்று, மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
திண்டுக்கல் வழியாக வரும் வாகனங்கள் தங்கம்மாபட்டி, வையம்பட்டி, மணப்பாறை, ராம்ஜி நகர், கருமண்டபம், மன்னார்புரம், நம்பர் 1 டோல்கேட் ஒய் சாலை, பனமங்கலம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக குமுளூர் பிரிவு சாலை, தச்சங்குறிச்சி, சிறுகனூர் வழியாக மாநாட்டுத் திடலுக்கு சென்று, மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
வடக்கு மண்டலத்திலிருந்து வரும் வாகனங்கள் பெரம்பலூர், சிறுவாச்சூர், பாடாலூர் சிறுகனூர் வழியாக மாநாட்டுத் திடலுக்கு சென்று, மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.
சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூர் புறவழிச்சாலை வழியாக துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி வழியாகச் செல்ல வேண்டும்.
சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூர் புறவழிச்சாலை, துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, புத்தாநத்தம், துவரங்குறிச்சி வழியாகச் செல்ல வேண்டும்.
மதுரையிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் விராலிமலை, மணப்பாறை, குளித்தலை, துறையூர், பெரம்பலூர் வழியாகச் செல்ல வேண்டும்.
சென்னையிலிருந்து கரூர் நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூர் புறவழிச்சாலை, துறையூர், முசிறி, குளித்தலை, கரூர் சென்று வர வேண்டும்.
சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூர் புறவழிச்சாலை, துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாகச் சென்று வர வேண்டும்.
அரியலூர் டால்மியாவிலிருந்து சேலம், நாமக்கல் நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் டால்மியா, கீழப்பழூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் மார்க்கமாகச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b