Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 08 மார்ச் (ஹி.ச.)
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும் போது :-
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டு இருக்கக் கூடிய போர் பதற்றம் என்பது, உலகம் முழுவதும் இருக்கக் கூடிய மக்களை பாதித்துக் கொண்டு உள்ளதாகவும், இந்தியாவில் இருந்து துபாய், அபுதாபி போன்ற நாடுகள் சுற்றுலா சென்று இருக்கக் கூடிய இந்தியர்கள் அங்கு சிக்கி தவித்துக் கொண்டு உள்ளதாகவும் என்கின்ற செய்தியை கேட்டவுடன் மத்திய அரசாங்கம் கொடுத்து இருக்கின்ற உதவி எண்களை பயன்படுத்திக் கொண்டு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உடைய என்.ஆர்.ஐ சேல் குழுவினரை தமிழகத்தில் இருந்து அங்கு சிக்கி தவித்துக் கொண்டு இருக்கின்ற, தேவைப்படக் கூடிய உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை அங்கு இருக்கக் கூடிய ஓவர்சீஸ் பிரண்ட் ஆப் பி.ஜே.பி மற்றும் இந்திய தூதரகம் வாயிலாக செய்து கொண்டு உள்ளதாகவும், கோவையில் இருந்து கிட்டத்தட்ட 12 பேர் துபாயில் 5 நாட்கள் சுற்றுலாவிற்காக சென்றவர்கள் அங்கு இந்த போர் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு உள்ளதாகவும், அவர்கள் இந்தியா திரும்பி வர உதவி செய்ய வேண்டும் என இங்க இருக்கக் கூடிய இவர்களது நண்பர்கள் நிலைமைகளை பற்றி வாட்ஸ் ஆப் வாயிலாக தகவல் தெரிவித்ததாகவும், உடனடியாக அவர்களது தொலைபேசி எண்களை எங்களின் என்.ஆர்.ஐ செல் வாயிலாக துபாயில் இருக்கக் கூடிய எங்களது அமைப்புக்கு கொடுக்கப்பட்டு, அவர்களும் இவர்களை தொடர்பு கொண்டு அங்கு இந்திய அரசாங்கத்தின் வாயிலாக ஏற்பாடு செய்த விமானத்தில் இவர்களுக்கெல்லாம் பயணம் சீட்டு வழங்கப்பட்டு, நேற்று இரவு இவர்கள் பத்திரமாக ஊர் திரும்பி உள்ளதாகவும் கூறினார்.
இவர்கள் அத்தனை பேரும் இந்த உதவியை செய்ததற்காக பாரதிய ஜனதா கட்சிக்கும், எனக்கும் நன்றி தெரிவிப்பதற்காக விமான நிலையத்திற்கு வந்து உள்ளதாக தெரிவித்தவர், அவர்கள் காண்பித்த ஒரு சில வீடியோக்களை பார்க்கும் பொழுது மிகுந்த ஒரு பதற்றத்திற்கு உள்ளாக கூடிய மன நிலைக்கு யாரும் வர முடியும், ஏனென்றால் இவர்கள் விமானம் ஏறும் போது கூட அங்கு ட்ரோன்கள் பறப்பதை அதை சுட்டு வீழ்த்தப்படுவதை இவர்கள் விமானம் ஏறுகையில் பார்த்துக் கொண்டு தான் விமானத்தில் ஏறி உள்ளதாக தெரிவித்தார்.
இது போன்ற சூழலில் அங்கு மாட்டிக் கொண்டு இருக்கக் கூடிய இந்தியர்கள் பத்திரமாக திரும்பி வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், மத்திய அரசும் உதவிகளை செய்து கொண்டு உள்ளதாகவும் நமது ஊரை சேர்ந்தவர்களுக்கு உடனடியாக இந்த உதவியை செய்ய முடிந்து இருக்கிறது என்பது எங்களுக்கு மிகுந்த ஆறுதலையும், சந்தோஷத்தையும் தருவதாக தெரிவித்தார்.
இதற்காக நன்றி இதை சொல்லக் கூடிய தாய்மார்கள், சகோதரிகள் சின்ன , சின்ன குழந்தைகள் எல்லாம் கூட அந்த கட்டத்தில் அவ்வளவு தூரம் பயத்தில் இருந்தார்கள் என்பது அவர்கள் சொல்லுகின்ற போது சுற்றுலா சென்று குடும்பத்தோடு, சந்தோஷமாக இருக்கச் சென்றவர்கள் இந்த ஒரு சூழலில் மாட்டி இருக்கிறார்கள் என்று இந்த மாதிரி அனுபவம், இப்படி மோசமான அனுபவம் அவர்களுக்கு கிடைத்து இருப்பது கொஞ்சம் வருத்தமாக இருந்ததாகவும், ஆனாலும் அதனை பேரும் பத்திரமாக ஊருக்கு திரும்பி விட்டார்கள் என்பது எங்களுக்கெல்லாம் மிகுந்த நிறைவை அளிப்பதாக தெரிவித்தார்.
இஸ்ரேலுக்குச் சென்ற பிரதமருக்கு இது போன்று போர் உள்ளது ஏன் ? அவர்கள் அறிவிக்கவில்லை என்பது குறித்தான கேள்விக்கு,
பிரதமர் ஒவ்வொரு நாட்டிற்கும் செல்கிறார், என்றார், அவர்களுடைய ராணுவ ரகசியங்களை, அவருடைய போர் ரகசியங்களை எப்படி ? இன்னொரு நாட்டிற்கு பகிர்ந்து கொள்வார்கள். என்று கேள்வி எழுப்பியவர், இப்பொழுது நாம் பக்கத்து நாட்டின் மீது போர் கொடுக்கிறோம், ஆபரேஷன் சித்தூர் போன்று அமெரிக்காவின் துணை ஜனாதிபதி இந்திய நாட்டில் தான் இருந்தார். அப்பொழுது அந்த அமெரிக்கா நாட்டினுடைய துணை ஜனாதிபதி தகவல் ஏன் ? இந்திய அரசு தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்ப முடியுமா ? என கேள்வி எழுப்பியவர், அடிப்படையான விஷயம் இது போன்ற போர், விஷயங்கள் போர் வியூகங்கள், எல்லாம் அந்தந்த அரசு, எந்த நேரத்தில் செய்கின்றார்களோ ? அப்பொழுது தான் செய்வார்கள். அதை அடுத்த நாட்டு தலைவர்களிடம் சொல்லுவார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்றார்.
இந்திய பெருங்கடலில் ஈரான் நாட்டு கப்பல் தாக்கப்பட்டது, இந்திய இறையாமைக்கு எதிராக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர் குறித்தான கேள்விக்கு,
இந்திய எல்லைக்குள் ஏதாவது ? நடந்து இருக்கும் என்றால், நிச்சயமாக இந்திய அரசு அதற்கான தக்க பதிலடி கொடுத்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இன்று கோவை நீதிமன்றத்தில் கல்லூரி மாணவியின் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்புக்காக உழைத்த காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிமன்றம், நீதிமன்ற ஊழியர்கள் அத்தனை பேருக்கும் பாராட்டு தெரிவித்தவர், கோவை ஒரு பாதுகாப்பான நகரமாக இந்தியாவிலே இருக்கின்ற சூழல் ஒரு காலத்தில் இருந்ததாகவும், இன்று அந்த பாலியல் பலாத்காரம் வெளியே தெரிந்தவுடன் கோவையில் இருக்கக் கூடிய அத்தனை மக்களும் அதிர்ச்சி அடைந்ததாகவும், உடனடியாக நீதி வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியின் சார்பிலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வாயிலாக அழுத்தத்தை கொடுத்ததாக கூறியவர், விரைவாக விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் சாகும் வரை ஆயுள் சிறையாக இருக்க வேண்டுமென தீர்ப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரண தொகுதியின் அறிவிக்கப்பட்டு இருக்கிறது, இதில் ஊடகங்கள் பெண்ணின் அடையாளத்தை, புகைப்படத்தை, தகவல்களை எல்லாம் கோவையில் இருக்கின்ற ஊடக நண்பர்கள் பத்திரிக்கை தர்மத்தை, உட்பட்டு அதை தகுந்த முறையில் அந்த நிகழ்வை சரியான விதத்தில் கையாண்டு உள்ளதற்கு எனது பாராட்டுக்கள் என தெரிவித்தார்.
ஏனென்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன் ? வெளியே சொல்லுவதில்லை என்றால், உடனடியாக அவர்களுடைய பெயர் மற்றும் மற்ற விவரங்கள் வெளியே வந்துவிடும் என்ற பயமும் வந்துவிடும், என்ற முக்கிய காரணம். ஆனால் இந்த வழக்கை பொறுத்த வரை அந்த ரகசியங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டு இருப்பது உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி என கூறினார்.
கோவையில் இந்த ஒரு தீர்ப்பு வந்தது காரணமாக கோவை மீண்டும் ஒரு பாதுகாப்பான நகரமாக இருக்கிறது என்றால், நிச்சயம் இல்லை. நேற்று கூட பார்சன் குடியிருப்பு பகுதியில் ஒரு முதிய பெண்மணி அங்கு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். முதியோர்கள் பாதுகாப்பாக இருக்கின்ற சூழல் என்பது வெகுவாக தமிழகத்தினுடைய மேற்கு மண்டபத்தில் மாறி விட்டதாகவும், வயதான பெற்றோர்களை விட்டு விட்டு வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட இப்பொழுதெல்லாம் தமிழகத்தில் வயதான பெற்றோர் தனியான இருக்க முடியாது.
பாதுகாப்புயற்ற சூழல் என்ற, அந்த எண்ணம் தற்பொழுது மக்களுக்கு அதிகமாக வந்து விட்டதாக தெரிவித்தவர், ஒருபுறம் இதுபோன்று தீர்ப்புகள் வாயிலாக சமூகத்தின் நம்பிக்கை ஏற்படுத்துகின்றன அதிலும், குறிப்பாக விரைவாக முடிக்கப்பட்ட வழக்குகள் ஆனால் அதேசமயம் தேருவுக்கு, தேருவு திறந்து வைத்து இருக்கக் கூடிய டாஸ்மார்க் கடைகள், எப்.எல் டு என்கின்ற ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும், வணிகப் பகுதிகளிலும் அனுமதி அளிக்கப்பட்டு வருவது, சட்டவிரோதமாக நடைபெற்று இருக்கக் கூடிய ஆளுங்கட்சி ஆதரவோடு நடைபெறக் கூடிய மது விற்பனை எல்லா இடங்களிலும், நிறைந்து கிடக்கும் போதை பொருட்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என்று அத்தனை பேருக்கும் எளிதாக கிடைக்கின்ற போதை பொருள் என்பது இன்று பெண்களுடைய பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக்கி கொண்டு உள்ளதாக கூறியவர்.
இன்று தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற மாநிலமாக இல்லை என்பது தான் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல இன்று பல்வேறு சமூக அமைப்புகள் கூட குற்றம் சாட்டுகின்றனர் எனவும், அதனால் திராவிட முன்னேற்ற கழக அரசு என்பது பெண்களுக்கு எதிரான அரசு, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வி அடைந்த அரசு, என்பது நிரூபணம் ஆகி கொண்டு உள்ளதாகவும்,
இந்த ஒற்றை தீர்ப்பு என்பது அத்தனை பெண்களுக்கும் பாதுகாப்பான நிலை ஏற்பட்டு விட்டது என்று பொய் பிரச்சாரத்தை தி.மு.க மேற்கொண்டு உள்ளதாக குற்றம் சாட்டியவர், ஆனால் உண்மை நிலை வேறு ஒன்றாக இருக்கிறது.
சமீப காலத்தில் அரசியல் கட்சியின் அழுத்தத்தின் காரணமாகவும் தேர்தல் வருகின்ற காரணத்தினால் ஏதோ ? ஒரு வழக்கில் விரைவாக தீர்ப்பு கொடுத்து விட்டால், மக்கள் மறந்து விடலாம் என்று அரசு நினைக்கலாம், ஆனால் குறிப்பாக கோவையின் உடைய பாதுகாப்பு என்பது இங்கு இருக்கக் கூடிய மக்களுடைய, பெண்கள், வயதானவர்கள் இவர்கள் உடைய பாதுகாப்பு மட்டுமல்ல, தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக உள்ளதாகவும், கோவையிலே சட்டம் - ஒழுங்கு குற்றச்செயல்கள் அதிகமாக இருப்பது என்பது தமிழகத்தின் உடைய வளர்ச்சியை பின்னோக்கி விடுவதாக நேற்றைய தினம் நடந்த கொலை வழக்கு என்பது கூட எந்த அளவிற்கு கோவை பாதுகாப்பு இல்லாத, நகரமாக இருக்கிறது. என்பதற்கு சாட்சியாக உள்ளது என்று கூறினார்.
த.வெ.க தலைவர் விஜய் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து உள்ளதாகவும், ஒரு பவுன் தங்கம் பெண்களுக்கு 2,500 மள்ளிகை பொருட்கள் வாங்குவதற்கு, பிறக்கிற குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போன்ற திட்டங்கள் மகளிர்க்காக அறிவித்து உள்ளதாகவும், இருக்கின்ற ஆட்சியாளர்கள் 30 சதவீதம் கமிஷன் அடிக்காமல் இருந்தால் இதை அனைத்தையும் வழங்கலாம் என கூறியது குறித்தான கேள்விக்கு
விஜய் அவர்கள் மகளிர்காக, மகளிர் தின ஸ்பெஷல் வாக்குறுதிகள் வழக்கமாக, சினிமாவிற்கு பொங்கல் ஸ்பெஷல், தீபாவளி ஸ்பெஷல் அது போன்று மகளிர் தினம் ஸ்பெஷல் போன்ற அறிவித்து உள்ளதாகவும், தேர்தலுக்கு முன்பாக எல்லா அரசியல் கட்சிகளுமே தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பது என்பது வழக்கமான நடைமுறை என்பது தான்.
ஆனால் புதிதாக வந்து இருக்கக் கூடிய அரசியல் கட்சி இந்த அளவிற்கு வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கிறார்கள் என்றால் நிச்சயமாக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா ? என்று மக்கள் மத்தியில் மக்கள் சந்தேகப்படுவார்கள் என்றும், விஜய் அவர்கள் தனியாக நின்று ஆட்சி அமைப்பாளர்கள் என்று யாராவது நம்ப முடியுமா ? என்றால் ஒருத்தராலும் நம்ப முடியாது.
விஜய் கட்சி இன்று தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்குமா ? அரசாங்கத்தை அமைப்பார்களா ? நிச்சயமாக இல்லை, அப்படி இருக்கின்ற போது, வாக்குறுதிகளை நாங்களும் வந்து தரலாம், அதில் அரசியல் கட்சிகள் எல்லாமே பெண்களுக்கு ஓடி, ஓடி வாக்குறுதி கொடுப்பது ஒரு பெண்களின் தலைவியாக நான் வரவேற்கிறேன் என்றார்.
ஏனென்றால் ஒரு காலத்தில் பெண்கள் வெறுமனே வாக்காளர்கள், ஆனால் இன்று பெண்கள் அரசு அதிகாரத்தை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக மாறிக் கொண்டு உள்ளதாகவும், இப்பொழுது எல்லாருடைய அறிக்கையும் பார்த்து புரிந்து கொள்ளலாம் என்றார்.
அ.தி.மு.க., தி.மு.க வாக்குறுதிகள் குறித்தான கேள்விக்கு
தி.மு.க., அ.தி.மு.க இவர்கள் இந்த மாநிலத்தை ஆண்டு கொண்டு இருப்பவர்கள், ஆண்டவர்கள், ஆள காத்துக் கொண்டு இருக்கிறவர்கள் . இவர்களுக்கெல்லாம் ஒரு டிராக் ரெக்கார்டு உள்ளதாகவும், அவர்கள் கூறினால் மக்கள் கேட்பார்கள். தி.மு.க சொன்ன வாக்குறுதி என்னாச்சு ? என்று கேட்பதாகவும், ஆனால் விஜய் அவர்கள் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். ஆட்சிக்கு வரப்போவதில்லை பார்ப்போம் என்றார்.
விஜய் வாக்குறுதியை வரவேற்கிறீர்களா ? என்ற கேள்விக்கு
ஒரு பெண்ணாக எது கொடுத்தாலும் பெண்களுக்கு சரி என்று சொல்லுவோம், ஆனால் வாய்ப்பு இருக்கிறதா ? என்று கேட்டால் *வாய்ப்பில்லை ராஜா* என்றார்..
பா.ஜ.க விஜய்க்கு 60 சீட்டு பேசிக்கொண்டு உள்ளதா ? என்ற கேள்விக்கு
இந்த கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றார்.
அதேபோன்று வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை ஒரு பெண் நாடி உள்ளார் (நடிகர் விஜய் மனைவி) குறித்தான கேள்விக்கு
தமிழகத்தின் அரசியல், அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஒரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கியதாகவும், தலைவர்களுக்கு எல்லாம், நான் தனிப்பட்ட தாக்குதலில் எப்பொழுதும் இறங்கியது கிடையாது.
ஆனால் தனி மனித வாழ்க்கையில் நாங்கள் எப்படி ? வேண்டுமானாலும் இருப்போம், அப்படி என்று சொல்லக் கூடிய கலாச்சாரத்தை தி.மு.க கட்சியில் இருந்து தான் துவங்கியதாகவும், அதனால் ஒவ்வொரு தலைவருமே அவர்களுடைய தனி மனித ஒழுக்கம், அவர்கள் எப்படி ? ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுகிறார்கள் ? என்பதை வைத்து தான் அவர்கள் சொல்லக் கூடிய வாக்குறுதிகள் பேசக் கூடிய வார்த்தை எவ்வளவு ? வார்த்தைகளில் இருக்கக் கூடிய உண்மை என்பது தெரியவரும், என்றால் அதனால் ஒரு தலைவருடைய வாழ்க்கை என்பது தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் கூட, அதிலும் கூட அவர்கள் எப்படி ? நடந்து கொள்கிறார்கள். என்பதை பார்த்து தான் நாம் அதை சொல்ல முடியும் என்றார்.
தேர்தலுக்குப் பின்பு இ.பி.எஸ் யின் பொறுப்பு மாற்றப்பட போகிறது. பா.ஜ.க இன்னொருத்தரை தேர்வு செய்து உள்ளதாக மு.க ஸ்டாலின் கூறி உள்ளது குறித்தான கேள்விக்கு
ஸ்டாலின் அவர்களுக்கு தினமும் கண்ணை மூடி கண்ணை திறந்தால், பா.ஜ.க தான் அவருக்கு வேறு எதுவுமே தெரியாது.
பீகாரில் நீண்ட நாள் முதலமைச்சராக இருந்தவர், அவரது முடிவு எடுக்கிறார்கள் என்றால், அவருடைய சொந்த விருப்ப, வெறுப்பு எல்லாம் கலந்தது. பீகாரில் பாரதிய ஜனதா கட்சி அதிகமான எம்.எல்.ஏ க்களை இந்த தேர்தலில் மட்டுமல்ல, போன தேர்தல்களிலும் அதிகமான எம்.எல்.ஏ க்கள் இருந்தும் கூட நித்திஷ் குமார் தான் முதலமைச்சர் என்று பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்ததாகவும், இந்த தேர்தலையும் அதே தான் செய்ததாகவும், இப்பொழுது அவர் முதல்வர் ஆகி உள்ளதாகவும், அவருடைய விருப்பப்படி அவர் ராஜ்யசபாவிற்கு மனு அளித்து உள்ளதாகவும் கூறியவர், இதில் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் பி.ஜே.பி தான் எல்லா முடிவு செய்கிறது. தமிழ்நாட்டில் பி.ஜே.பி உள்ளே வந்து விடும், இது தமிழகத்திற்கும் - டெல்லிக்குமானது என்று எ
ப்படி ? எல்லாம் சொல்லி கொண்டு உள்ளதாகவும்,
ஒரு குழந்தைகளுக்கு கூறுவது போன்று சாப்பிடவில்லை என்றால் பூச்சாண்டி, பிடித்துக் கொண்டு போய்விடும், பூதம் வந்துவிடும் அது போன்ற ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களை அது போன்று நினைத்துக் கொண்டு உள்ளதாகவும், நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால் பி.ஜே.பி வந்து விடும் என்று.
ஆனால் ஏற்கனவே பி.ஜே.பி உள்ளே வந்தாச்சுங்க ஸ்டாலின் சார், நீங்கள் அதனால் பி.ஜே.பியை பற்றி கவலைப்படாதீர்கள் என்றார்.
கூட்டணி இறுதி செய்வதில் முதலில் பா.ஜ.க, அ.தி.மு.க தான் செய்தனர். ஆனால் தற்பொழுது தி.மு.க முழுமையாக முதலில் இறுதி செய்து உள்ளது. ஆனால் தற்பொழுது கூட்டணிக்கு இயக்கிக் கொண்டு உள்ளதாகவும், கூட்டணி முடிந்ததா ? என்ற கேள்விக்கு
நாங்க ரொம்ப ஸ்டெடியாக போயிட்டு இருக்கோம். ரொம்பா கான்கிரீடாக போயிட்டு இருக்கோம்.
எங்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.
வேட்பாளர்களை அறிவிக்கும் போது பாருங்கள் என்றார்.
Hindusthan Samachar / Durai.J