Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 08 மார்ச் (ஹி.ச.)
ஆலங்குடி அரசு கலைக் கல்லூரி ஆலங்குடியை அடுத்துள்ள கீழாத்தூரில் இயங்கி வருகிறது.
இக்கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தந்தை பெரியார் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் தெய்வமலர் அவர்கள் பெண் யார் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் முதல்வர் கூடுதல் பொறுப்பு அ.ஜானகி தலைமை தாங்கினார்.
முனைவர் வனிதா அனைவரையும் வரவேற்றார்.
முனைவர் புஷ்பலதா நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்.
சிறப்பு விருந்தினருக்கான அறிமுக உரையினை தமிழ்த்திரை பேராசிரியர் நித்யா வழங்கினார்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் டாக்டர் சே. தெய்வமலர் பேசுகையில்,
பெண்களின் உரிமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து, ஒரு பெண் தன்னம்பிக்கையுடன், வீரத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
மேலும் பொருளாதார முன்னேற்றம், உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் பெண்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் விதத்தையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.
அதேபோல் ஒரு மனிதனின் வாழ்க்கையில் புத்தகங்களும் வாசிப்பும் மிகவும் முக்கியம் என்பதையும் கூறி,
“வாசிப்பை நேசிப்போம்” என்ற சிறந்த கருத்தையும் பகிர்ந்தார்.
அவருடைய உரை அனைவருக்கும் ஊக்கமளிக்கும் விதமாக சிறப்பாக அமைந்தது.
மூன்றாம் ஆண்டு கணிதத்துறை மாணவி ரம்ஜான் கனி நன்றி கூறினார்.
Hindusthan Samachar / Durai.J