கென் கருணாஸின் 'யூத் ' திரைப்படத்தின் முன்னோட்டம் - நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார்!
சென்னை, 08 மார்ச் (ஹி.ச.) பாடகர் - இசைக்கலைஞர் - நடிகர் - என பன்முக ஆளுமை திறன் படைத்த கென் கருணாஸ் கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகும் ''யூத் - Youth'' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் ம
m


சென்னை, 08 மார்ச் (ஹி.ச.)

பாடகர் - இசைக்கலைஞர் - நடிகர் - என பன்முக ஆளுமை திறன் படைத்த கென் கருணாஸ் கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகும் 'யூத் - Youth' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்TR அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'யூத் - Youth' திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு ,தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ் ஆகியோருடன் நடிகை நளினி சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறார்.

இவர்களுடன் சின்னத் தமிழா - தாஜ் மோலா - கெட்டவன் மணிகண்டன் - சுரேன் வின்சென்ட் உள்ளிட்ட டிஜிட்டல் திரை பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களின் களங்கமற்ற சந்தோசம் கொண்ட வாழ்வியல் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் - சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன்,

படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், மார்ச் மாதம் 19 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் பார்வையாளர்களின் மனதில் பசுமையாய் பதிந்த பள்ளிக்கூட நாட்களை நினைவு படுத்துவதால்,

இதற்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Hindusthan Samachar / Durai.J