குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தூங்கிக்கொண்டிருந்த 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் பரிதாப பலி
திருவள்ளூர், 09 மார்ச் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஓரம்பேடு கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் ஸ்ரீனிவாசன் (வயது 15) அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றான். இந்நிலையில், முனுசாமியின் குடிச
A 10th grade student who was sleeping


திருவள்ளூர், 09 மார்ச் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஓரம்பேடு கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் ஸ்ரீனிவாசன் (வயது 15) அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றான்.

இந்நிலையில், முனுசாமியின் குடிசை வீடு மின்கசிவு காரணமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீனிவாசன் தீயில் சிக்கினான்.

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் குடிசை எரிந்து சிறுவனின் மீது விழுந்தது.

இதனால் தீயில் சிக்கிய சிறுவன் உடல் கருகி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான்.

15 வயதி சிறுவன் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b