Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 மார்ச் (ஹி.ச.)
நாள்தோறும் கொலை நிலவரம் பார்க்கும் நிலை என்று திமுக அரசுக்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில், சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பை சீர்குலைத்த திமுக அரசுக்கு கண்டனம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதியவர் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு, மனைவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகவும்,
சென்னை திரிசூலத்தில் குடிசை வீட்டில் தங்கியிருந்த இருவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
திமுக ஆட்சியில் கொலை நடக்காத நாள் இல்லை; பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகாத நாள் இல்லை என்ற அளவிற்கு நாள்தோறும் கொலை நிலவரம் பார்க்கும் நிலைக்கு சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது.
ஒரு அரசின் முதல் கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுக்கப்பதைத் தவறிய ஸ்டாலின் மாடல் திமுக அரசு, Total Failure அரசாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மேற்கூறிய வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
மக்களைக் காக்கத் தவறிய திமுக அரசு இன்னும் இரண்டே மாதங்களில் வீழப் போகிறது. மக்களைக் காக்கும், தமிழகத்தை அமைதி, வளம், வளர்ச்சிப் பாதையில் மீட்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அமையப் போவது உறுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN